search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயரிங் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்
    X

    என்ஜினீயரிங் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்

    என்ஜினீயரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நாளை (6-ந்தேதி) தொடங்குகிறது.
    சென்னை:

    இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நாளை (6-ந்தேதி) கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் அன்று சென்னைக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான தகவல் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கிட்டு பிரிவு மாணவர்கள் 7-ந்தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு 8-ந்தேதி கவுன்சிலிங் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

    காலை 9.00 மணி, 10.30 மணி, நண்பகல் 12 மணி என 3 கட்டங்களாக கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதற்கான தகவல்கள் மாணவர்களுக்கு இ.மெயில், எஸ்.எம்.எஸ். வழியே அனுப்பப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொதுப்பிரிவு மாணவர்கள் தங்களின் விருப்ப பாடப்பிரிவு மற்றும் விருப்ப கல்லூரியை பதிவு செய்யும் நடவடிக்கைகளை https:www.tnea.ac.in மற்றும் www.annauniv.edu ஆகிய இணையதளங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×