என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Meteorological #Rain

    சென்னை:

    தமிழ்நாட்டில் நேற்று இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    சென்னையில் நேற்று இரவு சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வெப்ப சலனம் மற்றும் மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.

    அதிகப்பட்சமாக திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 17 செ.மீட்டரும், காஞ்சீபுரத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    24 மணி நேரத்தில் பொறுத்தவரை வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 49 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 46 மில்லி மீட்டர் மழை பெய்யும்.தெற்கு மேற்கு மழை இயல்பு விட 6 சதவீதம் அதிக மழை பெய்தள்ளது. #Meteorological #Rain

    Next Story
    ×