search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் பலி
    X

    சாயல்குடி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் பலி

    சாயல்குடி அருகே நள்ளிரவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உடல் நசுங்கி இறந்தார்.

    சாயல்குடி:

    திருச்செந்தூரில் இருந்து வேதாரண்யத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் நள்ளிரவு 12 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற சுற்றுலா பஸ் எதிர்பாராதவிதமா அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தன.

    இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 14 பேரும் சுற்றுலா பஸ்சில் பயணம் செய்த 15 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்து கடலாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர்.

    காயமடைந்தவர்களில் 11 பேரை சாயல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும், 4 பேரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும், 15 பேரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூபாலன் (21) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ஆவார். விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×