என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியாங்குப்பத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது
    X

    அரியாங்குப்பத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது

    அரியாங்குப்பத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அரியாங்குப்பம்:

    புதுவை அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அங்கு பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகளையும், அவ்வழியே சென்ற பெண்களையும் பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

    இதுபற்றிய தகவலின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்த சத்யானந்தன் (வயது 29) மீனவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து சத்யானந்தனை கைது செய்தனர்.

    Next Story
    ×