search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டியில் இன்ஸ்பெக்டர்-காவலர் மட்டுமே பணியாற்றும் மகளிர் போலீஸ் நிலையம்
    X

    கும்மிடிப்பூண்டியில் இன்ஸ்பெக்டர்-காவலர் மட்டுமே பணியாற்றும் மகளிர் போலீஸ் நிலையம்

    தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற தொகுதி என்ற பெருமைக்குரிய கும்மிடிப்பூண்டியில் இன்ஸ்பெக்டர்-காவலர் மட்டுமே பணியாற்றும் மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி போலீஸ் குடியிருப்பில் உதவி ஆய்வாளருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில் இயங்கி வந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் தற்போது ரெட்டம்பேடு சாலையில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே கீழ்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 2559 சதுர அடி கொண்ட புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    இந்த புதிய கட்டிடத்திற்கான தொடக்க விழா கடந்த 20-ந்தேதி நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டியைச் சுற்றி உள்ள 61 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள், பேரூராட்சி என கும்மிடிப்பூண்டி தாலுக்காவிற்கான இந்த மகளிர் காவல் நிலையத்தில் இதுவரை போதிய பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

    இங்கு ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் காவலர் மட்டுமே பணியில் உள்ளனர். அந்த பெண் இன்ஸ்பெக்டர் கூட பெரும்பாலும் பல்வேறு அலுவல் பணிகாரணமாக வெளியிடங்களுக்கு சென்று விடுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.

    இதனால் ஒரு பெண் போலீசார் மட்டும் காவல் நிலையத்தில் எப்போதும் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த மகளிர் காவல் நிலையத்திற்கு என்று உரிய சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் காவலர்கள் என யாரையும் இதுவரை நியமனம் செய்யாததால் குடும்ப வழக்குகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    தினமும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது புகார்களுக்கு உரிய தீர்வு காண முடியாமல் மகளிர் காவல் நிலையம் வாசலில் தவித்து வருகின்றனர்.

    எனவே தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் மகளிர் காவல் நிலையம் போலீசார் இல்லாததால் வெறிச்சோடி உள்ளது.

    தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற தொகுதி என்ற பெருமைக்குரிய கும்மிடிப்பூண்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கென கட்டிடம் அமைந்துள்ளதால் அதனை முழுமையாக செயல்படுத்த உரிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் காவலர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×