search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் இன்று காவல் துறை மானியம்- சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
    X

    சட்டசபையில் இன்று காவல் துறை மானியம்- சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

    சட்டசபையில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. #TamilnaduAssembly #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கியது. தினமும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இம்மாதம் 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 10 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு, நேற்று மீண்டும் சட்டசபை கூடியது.

    நேற்றைய தினம் செய்தி மற்றும் சுற்றுலாத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.

    வழக்கம்போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் இன்றைய கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில், ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., இன்றைய சட்டசபை கூட்டத்தில் சட்டம் -ஒழுங்கு பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.



    எனவே, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் இன்றைய கூட்டத்தில் பஞ்சமிருக்காது. இதே பிரச்சினையை தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசும் எழுப்ப இருக்கிறது. #TamilnaduAssembly #EdappadiPalanisamy
    Next Story
    ×