search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கயத்தாறு அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
    X

    கயத்தாறு அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

    கயத்தாறு அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகேயுள்ள திருமங்கலகுறிச்சி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆதம்அலி தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பணம் வைத்து சூதாடிய திருமங்கலகுறிச்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், கோதண்டராமன், பெருமாள், மணிகண்டன், வெயிலுமுத்து, சித்திரபாண்டி, அய்யாபுரம் பகுதியை சேர்ந்த காசிப்பாண்டி ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2350 பறிமுதல் செய்யப்பட்டது.

    கயத்தாறு பள்ளிக்கரணை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்றதாக வடக்குசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெரியசாமி(65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×