என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் ஏட்டுவை தாக்கிய 3 பேர் கைது
மயிலாடுதுறையில் ஏட்டுவை தாக்கிய கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் நேற்று இரவு பணி முடிந்து சாதாரண உடையில் மயிலாடுதுறை கச்சேரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற 3 பேர் கும்பல் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை தள்ளி விட்டனர். இதை கண்ட ரவிச்சந்திரன், அவர்களை கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், ஏட்டு ரவிச்சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த நடராஜன் (34), வானாதிராஜபுரத்தை சேர்ந்த பாலு (38), மற்றும் வினோத்குமார்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story






