search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் விரைவு சாலை விவசாயிகளிடம் கருத்து கேட்டு நிலம் கையகப்படுத்தப்படும் - கலெக்டர் தகவல்
    X

    சேலம் விரைவு சாலை விவசாயிகளிடம் கருத்து கேட்டு நிலம் கையகப்படுத்தப்படும் - கலெக்டர் தகவல்

    சேலம் விரைவு சாலை விவசாயிகளிடம் கருத்து கேட்டு நிலம் கையகப்படுத்தப்படும் என்று காஞ்சீபுரம் கலெக்டர் கூறியுள்ளார். #GreenWayRoad

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டுதல், கரும்புக்கு கூலி, சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்ட மறுபரிசீலினை, உரங்கள் வழக்க கோருதல், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியபோது:-

    மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்து பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் இக்குறை தீர் கூட்டம் நடத்தப்படுகிறது. ஈசூர், வள்ளிபுரம், உள்ளாவூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கருத்துரு இறுதிவடிவம் பெறும் வகையில் தடுப்பணை கட்டும் முழு விவரம் அதற்கு ஆகும் செலவு குறித்த விவரம் அனைத்தும் நிதித்துறைக்கு அனுப்பபட்டுள்ளது.

    அதன்படி நிதித்துறையில் இருந்து நிதி ஒதுக்கும் பட்சத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேலும் சென்னை-சேலம் 8 வழிச் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் படி நிலம் கையப்படுத்தும்போது அரசு விதிமுறைகளை பின்பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். அதோடு விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்படும். அதன்பிறகு முறையாக 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதாபானுமதி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தேவராஜன் உள்ளிட்ட பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #GreenWayRoad

    Next Story
    ×