search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை வியாபாரி பலியான வழக்கில் மேலும் 3 கொள்ளையர்கள் கைது
    X

    நகை வியாபாரி பலியான வழக்கில் மேலும் 3 கொள்ளையர்கள் கைது

    போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே வேகத்தடையில் தவறி விழுந்து நகை வியாபாரி பலியான வழக்கில் மேலும் 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    திருச்சியை சேர்ந்த நகை வியாபாரி ரங்கநாதன் கடந்த மாதம் 25-ந்தேதி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே வேகத்தடையில் சிக்கி பலியானார்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 3 கொள்ளையர்களை விரட்டிச் சென்ற போது அவர் தவறி விழுந்து உயிரிழந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் வீரகுமார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்தார்.

    அப்போது ரங்கநாதனிடம் ½ கிலோ தங்கம், கொள்ளையடிக்கப்பட்டதும், இந்த நகையுடன் தப்பிச் சென்றவர்களை விரட்டியபோது தான் அவர் கீழே விழுந்து பலியானதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த வழிப்பறியில் 9 பேர் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. இது தொடர்பாக மகேந்திரன், ஆனந்த், முகமது, மம்முட்டியான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நூர் முகமது, பீட்டர், முகமது ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான ஸ்பென்சர்குமார், இம்ரான் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் ஸ்பென்சர் குமாரிடம் தான் ½ கிலோ நகையும் இருப்பதாக கூறப்படுகிறது. 2 பேரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
    Next Story
    ×