என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் மாவட்டத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
Byமாலை மலர்9 Jun 2018 4:46 PM GMT (Updated: 9 Jun 2018 4:46 PM GMT)
கரூர் மாவட்டத்தில் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம் நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர், சேமங்கி, மரவாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லைப்பூ, செண்டுமல்லி, அரளி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா, கோழிக்கொண்டைப்பூ போன்ற வகைகளையும், மருவு, துளசி போன்ற தழை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் பூக்கும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து லேசான கோணிப்பைகளில் போட்டுவைக்கின்றனர். பூக்களை வேலாயுதம்பாளையம், கொடுமுடி, பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பரமத்தி தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கிச்சென்று பூக்களை கட்டி முழம் கணக்கிற்கு விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரம் குண்டு மல்லி பூ ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், அரளி ரூ.80-க்கும், சம்மங்கி ரூ.70-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.130-க்கும், கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.10-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.10-க்கும், ஆடாதுடை ஒரு கட்டு ரூ.10-க்கும் வாங்கி சென்றனர்.
நேற்று குண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.200-க்கும், அரளி ரூ.60-க்கும், சம்மங்கி ரூ.50-க்கும், செவ்வந்தி பூ ரூ.50-க்கும், ரோஜா ஒரு கிலோ ரூ.90-க்கும், கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ.6-க்கும், ஆடாதுடை ஒரு கட்டு ரூ.5-க்கும், துளசி ஒரு கட்டு ரூ.5-க்கும் வாங்கிச்சென்றனர். பூக்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
×