search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது போதையில் தகராறு: மெக்கானிக் காதை கடித்த லாரி டிரைவர் கைது
    X

    மது போதையில் தகராறு: மெக்கானிக் காதை கடித்த லாரி டிரைவர் கைது

    மது போதையில் நடந்த சண்டையை விலக்க சென்றவருக்கு காது துண்டானது. இதில் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டையைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் அசோக்( 23) லாரி டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கீதா. சம்பவதன்று அசோக் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி பிரியாவை தாக்கி தகராறு செய்தார். இதைத் பக்கத்து வீட்டை சேர்ந்த கீதா அங்கு சென்று அசோக்கை கண்டித்தார். உடனே அசோக் கீதாவை தாக்க முயன்றார்.

    அங்கிருந்து வெளியே வந்த கீதா இது குறித்து தனது அண்ணன் மெக்கானிக் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த அருண்குமார் இது குறித்து அசோக்கிடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அசோக், அருண்குமாரின் காதை கடித்து துண்டாக்கி விட்டார். இதில் அலறி துடித்த  அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து லாலாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.
    Next Story
    ×