என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணி கடை அதிபர் வீட்டில் திருட முயற்சி: வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது
    X

    துணி கடை அதிபர் வீட்டில் திருட முயற்சி: வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது

    ராசிபுரத்தில் துணி கடை அதிபர் வீட்டில் பொருட்களை திருட முயன்ற வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம்  ஆட்டையாம்பட்டியில் ராசிபுரம் மெயின் ரோட்டில் துணி கடை அதிபர் சேகர் என்பவரின் வீடு உள்ளது. இவர் நேற்றிரவு வழக்கம் போல கடைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பினார். 

    அப்போது வீட்டின் முன் பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் 2 பேரும் வெளியில் தப்பியோடினர். 

    இதை பார்த்த அந்த பகுதியினர் 2 பேரையும்  சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆட்டையாம்பட்டி போலீசில் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்சிங் 21, ஜோத்சிங் 26 என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொங்கணாபுரம் பகுதியில் டீ கடை நடத்தி வருவதாகவும்  போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×