search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - புதிய சீருடை, பாடப்புத்தகங்களை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்
    X

    கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு - புதிய சீருடை, பாடப்புத்தகங்களை மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்

    கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாற்றப்பட்ட சீருடையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து விலைஇல்லா பாடப்புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. கடந்த மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த மாதம் 23-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவு 30-ந் தேதியும் வெளியிடப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு கடந்த மாதம் 30-ந்தேதி வெளியிட்டதால் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த சேர்க்கை முடிந்த பின்னர் 11-ம் வகுப்புகள் தொடங்கப்படும்.



    நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் காலையில் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு அவர்களின் பெற்றோர்களுடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் இறைவணக்க பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் முதன் முதலாக சேர்ந்துள்ள பெரும்பாலான குழந்தைகள் பழக்கம் இல்லாத இடம் என்பதால் வகுப்புகளுக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து அழுதன. அந்த குழந்தைகளுக்கு சாக்லெட், மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் ஆசிரியர்கள் கொடுத்தனர்.

    பெற்றோர்கள் பலர் பள்ளிக்கூடம் அருகிலேயே இருந்து பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

    மாணவர்-மாணவிகள் அரசு அறிவித்த சீருடைகளை அணிந்து பள்ளிகளுக்கு வந்தனர். அவர்கள் அணிந்து இருந்த சீருடைகள் தனியார் பள்ளிச் சீருடைகள் போல சிறப்பாக இருந்தன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விலை இன்றி கொடுக்கப்பட்டன. 1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. 
    Next Story
    ×