search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாருடன் வாக்குவாதம்: கைதானவரின் மனைவி தற்கொலை மிரட்டல்
    X

    போலீசாருடன் வாக்குவாதம்: கைதானவரின் மனைவி தற்கொலை மிரட்டல்

    ஏ.டி.எம். மோசடி வழக்கில் எனது கணவரை போலீசார் கைது செய்ததால் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    ஏ.டி.எம். மோசடி வழக்கில் லாஸ்பேட்டை காந்தி நகர் டேனியல் சுந்தர்சிங் இன்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டேனியல் சுந்தர்சிங் மனைவிஆனந்தி உருளையன் பேட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது கணவர் அப்பாவி, அவரை விடுவிக்க வேண்டும், இல்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்வேன் என்று கூறினார்.

    பின்னர் ஆனந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு டேனியல் சுந்தர்சிங் புதுவை கொசக்கடை வீதியில் துணிக் கடை வைத்துள்ளார்.

    எனக்கும், அவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறது. துணிக்கடையில் கிடைக்கும் வருமானமே போதுமானது.

    கடந்த 2014-ம் ஆண்டு சந்துருஜி எனது கணவருடன் தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு பொருட்கள் வாங்க ஸ்வைப்பிங் மி‌ஷன் தேவைப்படுகிறது. அதற்கான கமி‌ஷன் தொகையை நான் செலுத்தி விடுகிறேன் என்று கூறினார்.

    பின்னர் நண்பர்கள் 2 பேர் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஸ்வைப்பிங் மிஷினை கேட்டு வந்தனர். அவர்கள் முகவரியை வாங்கி வைத்து விட்டு ஸ்வைப்பிங் மிஷினை கொடுத்து அனுப்பினர்.

    கடந்த 2 ஆண்டுகளாக ரூ.58 லட்சம் வரை ஸ்வைப் பிங் செய்துள்ளனர். இதனால் எனது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனது கணவர் கணக்கில் வந்த ரூ. 58 லட்சத்தையும் சந்துருஜியிடம் கொடுத்து விட்டார்.

    அப்போது அவர்கள் 8 சதவீதம் கமி‌ஷன் கொடுப்பதாக கூறினார்கள். அதை அவர் ஏற்கவில்லை. நீங்கள சட்ட விரோதமாக ஏதோ செய்கிறீர்கள். அதனால் எனது ஸ்வைப்பிங் மிஷினை கொடுத்து விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு சந்துருஜியும்,அவரது ஆட்களும் எனது கணவரை கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினர்.

    சில நாட்கள் கழித்து ஸ்வைப்பிங் மிஷின் கொரியரில் எங்கள் வீட்டுக்கு வந்தது. அதனை எனது கணவர் சம்பந்தப்பட்ட வங்கியில் சரண்டர் செய்துள்ளார். அப்போது உங்கள் ரூ. 58 லட்சம் வரை ஸ்வைப்பிங் செய்யப்பட்டதால் அதற்கான வரி ரூ. 12 லட்சம் செலுத்தி உள்ளோம். அதற்கான ரசீது எங்களிடம் இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உங்கள் கணவர் ஏ.டி.எம். பண மோசடியில் சிக்கி உள்ளார். அவரை விடுவிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும்.

    இதையடுத்து நானும், எனது உறவினர்களும் சேர்ந்து நகைகளை அடகு வைத்து ரூ. 95 ஆயிரம் கொடுத்தோம். அதற்கான ரசீது எங்களிடம் இருக்கிறது. ஆனால், இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் எனது கணவரை குற்றவாளியாக சேர்த்துள்ளனர். நாங்கள் கொடுத்த ரூ. 95 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 75 ஆயிரம் மீட்டதாக கூறி இருந்தனர்.

    இது திட்டமிட்ட சதி. ஏடி.எம். மோசடிக்கும், எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. முக்கிய குற்றவாளியான சந்துருஜியை கைது செய்யாமல் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவரை கைது செய்து இருக்கிறார்கள்.

    இதனால் எனது கணவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் எனது கணவருடன் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×