search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-1 தேர்வில் 4 பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை
    X

    பிளஸ்-1 தேர்வில் 4 பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை

    வேடந்தாங்கல் அருகே பிளஸ்-1 தேர்வில் 4 பாடத்தில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மதுராந்தகம்:

    வேடந்தாங்கலை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் தீபா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் தீபா 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தீபா பள்ளிக்கு சென்று வந்தார். பள்ளியில் இருந்து வந்தது முதல் அவர் யாரிடமும் பேசவில்லை. பெற்றோர் கேட்டபோதும் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபா திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் தீபா பிணமாக கிடப்பது தெரிந்தது. 4 பாடங்களில் தேச்சி பெறாததால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    கோவளத்தை அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் ‌ஷமியா (23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 30-ந் தேதி அவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார். இவரது மகள் ரபீனா (வயது 18). மேச்சேரியில் உள்ள தனது பாட்டி அம்மாசி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கோடை விடுமுறையில் ரபீனா மாதா கோவில் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    பிளஸ்- 1 தேர்வில் ரபீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிநயா (14). 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டு வேலை செய்யும்படி அபினயாவை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த அபினயா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.#tamilnews
    Next Story
    ×