search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி?- மருத்துவர் விளக்கம்
    X

    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி?- மருத்துவர் விளக்கம்

    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    நிபா வைரஸ் நோயை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் என்பது தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் நோயை விளைவிப்பதற்கு காரணமாக இருந்து வருகிற ஒரு பாராமைக் ஸோவைரஸ் நோய்க்கிருமியாகும்.

    1998-99 ஆண்டு வாக்கில் மலேசியா, சிங்கப்பூரில் இத்தொற்று பரவியபோது இது முதன் முறையாக அடையாளம் காணப்பட்டது. மற்றும் இத்தொற்றுநோய் தொடங்கிய கிராமத்தின் பெயரே இதற்கு சூட்டப்பட்டது.

    தொற்று பாதிப்புள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். சமைக்காத உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு மட்டும் சாப்பிடவும்.

    ஆரஞ்சு மற்றும் வாழைப் பழங்கள் போன்ற பழங்கள் அவைகளை பாதுகாப்பாக வைக்கிற உறுதியான தோல்களை கொண்டிருக்கின்றன. ஆப்பிள்கள் மற்றும் ஆரஞ்சு பழங்களை பயன்படுத்துவதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தப்படுத்திய பிறகு உட்கொள்ளலாம். பொதுவாக சேதமடைந்துள்ள அல்லது ஓட்டை விழுந்துள்ள, கடிக்கப்பட்டுள்ள பழங்களை ஒருபோதும் உண்ண வேண்டாம்.

    காய்ச்சல், தலைவலி, தூக்கக் கலக்கம், சூழல் உணர்விழப்பு மற்றும் பிதற்றல் ஆகிய அறிகுறிகள் தொடங்கிய பிறகு 3 முதல் 14 நாட்களுக்குள் நிகழக்கூடும். இது வளர்ச்சியடைந்து 24 முதல் 48 மணி நேரங்களில் நினைவிழப்பு நிலையான கோமாவில் கொண்டுபோய் விடக்கூடும். நுரையீரல் பிரச்சனைகளாக இந்நோய் வெளிப்படுவது பொதுவாக நிகழ்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #NipahVirus
    Next Story
    ×