search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 45 கைதிகள் தேர்ச்சி
    X

    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 45 கைதிகள் தேர்ச்சி

    தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சிறைச்சாலையில் தேர்வு எழுதிய கைதிகளில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். #TNHSCResult #PlusOneResult2018
    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மெட்ரிக் பள்ளிகளே முதலிடத்தில் உள்ளன. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.6 சதவீதம் ஆகும். பெண்கள் பள்ளிகள் 94.9 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.4 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 91.6 சதவீதம், அரசுப் பள்ளிகள் 83.9 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 80.9 சதவீதம் என்ற அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2729. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 2450.

    வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர். இவர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல் பாடவாரியான தேர்ச்சி விகிதம், மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், மொத்த மதிப்பெண் அடிப்படையிலான பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை http://dge.tn.nic.in/HRSECFIRSTYEARMARCH2018ANALYSIS.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.   #TNHSCResult #PlusOneResult2018

    Next Story
    ×