என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    தேவதானப்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

    தேவதானப்பட்டி அருகே கோவிலுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் ஞானாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு கோவில் பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். கோவில் வைப்பறையில் தேடிப்பார்த்த போது அங்கு விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. உண்டியலையும் உடைத்து எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசி விட்டு ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.

    இன்று காலையில் கோவில் திறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். கொள்ளையர்கள் உள்ளே வந்திருப்பதை அறிந்து இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×