search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல்
    X

    பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல்

    சுங்க சாவடி ஊழியரை தாக்கிய அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் நள்ளிரவில் மங்களமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் ஏற்பட்டது.

    பெரம்பலூர்:

    சென்னை அரசு கேபிள் டி.வி. மேலாண் இயக்குகுநர் குமரகுருபாரன். இவர் நேற்று இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்த போது பெரம்பலூர் அருகேயுள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தகவல் அறிந்து பெரம்பலூர் மாவட்ட கேபிள் டி.வி. வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வரு வாய்த்துறை ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, அப்போது வருவாய் துறையினருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

    அப்போது காசிநாதன் என்ற சுங்க சாவடி ஊழியரை பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட காசிநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே சுங்க சாவடி ஊழியரை தாக்கிய வருவாய் அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் நள்ளிரவில் மங்களமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் திருமாந்துறை சுங்கச்சாவடியில் அதிகாலை வரை சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் இயக்கப்பட்டன. இன்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறியதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் இன்று அதிகாலை பணிக்கு திரும்பினர்.

    Next Story
    ×