search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    போராட்ட மிரட்டல்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளை சில இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையிலும் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.

    இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளை சில இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு.

    இதையடுத்து அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்கமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring #TNCM #Edappadipalanisamy #OPanneerSelvam

    Next Story
    ×