என் மலர்

  செய்திகள்

  ராயபுரம் பகுதியில் பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
  X

  ராயபுரம் பகுதியில் பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயபுரம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக சில குறிப்பிட்ட மின்சார ரெயில்களை ரத்து செய்தும் சில ரெயில் சேவையை மாற்றி அமைத்தும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
  சென்னை:

  ராயபுரம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக சில குறிப்பிட்ட மின்சார ரெயில்களை ரத்து செய்தும் சில ரெயில் சேவையை மாற்றி அமைத்தும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

  இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  ராயபுரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (வியாழக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  * வேளச்சேரியில் இருந்து காலை 10.15 மணிக்கு ஆவடி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் வேளச்சேரியில் இருந்து காலை 11.20 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை-திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

  * அரக்கோணத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு வேளச்சேரி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு திருப்பி விடப்படும். இதைப்போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 8.50 மணிக்கு வேளச்சேரி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு திருப்பி விடப்படும்.

  * மூர்மார்க்கெடில் இருந்து காலை 11.15 மணிக்கு ஆவடிக்கும், மதியம் 12.15 மணிக்கு திருத்தணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×