என் மலர்
செய்திகள்

6 மாதம் கூடுதல் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி கமிஷன் அரசுக்கு கடிதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #JayalalithaDeath
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் பதவி காலம் ஜூன் 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் கூடுதலாக 6 மாத அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #JayalalithaDeath
Next Story






