என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மாபுரியில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    தர்மாபுரியில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

    தர்மாபுரியில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி வழுதாவூர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது68). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளாக நோய் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் பெற்று வந்தார். நோய் கொடுமை காரணமாக அவ்வப்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போதெல்லாம் அவரது குடும்பத்தினர் தற்கொலை முயற்சியை தடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டின் முன்பக்க வாயில்கேட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராவ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×