என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே பலத்த காற்றுடன் மழை - மின் கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தது
    X

    சென்னிமலை அருகே பலத்த காற்றுடன் மழை - மின் கம்பங்கள் ரோட்டில் சாய்ந்தது

    சென்னிமலை அருகே பலத்த காற்றுடன் மழை கொட்டியபோது 3 மின் கம்பங்கள் ரோட்டின் குறுக்கே முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ளது கூத்தம்பாளயைம் அடுத்த பாலதொழுவு கொளத்துப்பாளையம். இந்த ஊர் வழியாக பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து காளிபாளையம் வரை உயர் அழுத்த மின்சாரம் செல்கிறது. ஒரே கம்பத்தில் 3 லைன் செல்லும் வகையில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கொளத்துப்பாளையம் அருகே வரிசையாக இருந்த 3 மின் கம்பங்கள் நடுரோட்டின் குறுக்கே விழுந்துள்ளது.

    இதில் 2 கம்பங்கள் முறிந்தும், ஒரு கம்பம் அடியோடு கீழே விழுந்தது. மின் கம்பங்கள் முறிந்து விழும் போது தானாகவே மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த பகுதியில் மேலும் ஒரு மின் கம்பம் கீழே விழும் அபாய நிலையில் சாய்ந்தபடி உள்ளது. இந்த வழியே தினமும் சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கும் அங்கிருந்து சென்னிமலைக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

    மின் கம்பங்கள் ரோட்டில் விழுந்ததால் அந்த வழியே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால்பஸ், கார், வேன் உள்பட அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி உள்ள பல மின் கம்பங்களை ஆழமாக குழி தோண்டி நடாமல் மேலோட்டமாக நட்டுள்ளனர். இதனால் லேசான காற்று வீசியதற்கே மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளது.

    இந்த கம்பங்கள் கீழே விழுந்ததும் ஊத்துக்குளி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் யாரும் மதியம் வரை வரவில்லை. சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×