search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் மரணம் அடைந்த உஷாவின் கணவருக்கு முதலமைச்சரின் ரூ.7 லட்சம் நிவாரண நிதி- கலெக்டர் வழங்கினார்
    X

    விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை அவரது கணவரிடம் கலெக்டர் வழங்கினார்.#Usha #InternationalWomensDay
    திருச்சி:

    திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.

    அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.

    அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.திருச்சி:

    திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.

    அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.

    அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.#Usha #InternationalWomensDay
    Next Story
    ×