என் மலர்

  செய்திகள்

  திருச்செந்தூர் அருகே ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
  X

  திருச்செந்தூர் அருகே ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செந்தூர் அருகே மகள் மாயமானதால் விரக்தி அடைந்த ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் கிங் காலனியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது51). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். 

  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகள் மாயமானதாக திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து மகள் காணாமல் போனது முதல் மன விரக்தியில் காணப்பட்ட இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் போலீசார் குமாரவேல் உடலை  கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×