என் மலர்
செய்திகள்

நாகமலை புதுக்கோட்டை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- சமையல் தொழிலாளி பலி
கோட்டை:
நெல்லை மாவட்டம் நாங்குனேரியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் மாயாண்டி (வயது 29). இவரது நண்பர் முருகன் (28). சமையல் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் மதுரையில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்கு சமையல் செய்ய வந்திருந்தனர்.
வேலை முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள யோகநரசிம்ம நகர் மொட்டமலை அருகே மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.