என் மலர்

  செய்திகள்

  போடி அருகே மணல் கடத்திய டிராக்டர் - லாரிகள் பறிமுதல்
  X

  போடி அருகே மணல் கடத்திய டிராக்டர் - லாரிகள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போடி அருகே மணல் கடத்திய டிராக்டர்-லாரிகள் பறிமுதல்
  மேலசொக்கநாதபுரம்:

  போடி அருகே டொம்புச்சேரி பகுதியில் குருமணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி மணல் அள்ளும் பாஸ் இல்லாமல் சிலர் மணல் கடத்தி வந்தனர்.

  இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து மணல் எடுக்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி சிலர் தொடர்ந்து மணல் கடத்தி வந்தனர். அதிகாரி கந்தசாமி தலைமையில் பணியாளர்கள் டொம்புச்சேரி பகுதியில் ரோந்து சென்றனர்.

  அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் மற்றும் 4 டிப்பர் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அதில் குருமணல் எடுத்துவந்தது தெரியவந்தது. ஆனால் அவர்களிடம் பாஸ் இல்லை. இதனையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×