என் மலர்
செய்திகள்

கோவை செல்வபுரத்தில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
கோவை செல்வபுரத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பெண் தவறி விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
கோவை:
கோவை பூலுவபட்டியில் இருந்து காந்திபுரத்திற்கு இன்று 12 மணிக்கு அரசு டவுண் பஸ் புறப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முன் பக்க படிக்கட்டு அருகே நின்றவாறு பயணம் செய்தார்.
செல்வபுரம் செக்ஸ்போஸ்ட் அருகே வந்தபோது பஸ் ஒரு வளைவில் திரும்பியது. அப்போது அந்த பெண் தவறி விழுந்தார். அப்போது அதே பஸ்சின் பின் சக்கரம் பெண்ணின் மீது ஏறி இறங்கியது.
இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மேற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story