என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல்லில் வங்கி வாடிக்கையாளர்களிடம் ரகசிய எண் கேட்டு மிரட்டல்
  X

  திண்டுக்கல்லில் வங்கி வாடிக்கையாளர்களிடம் ரகசிய எண் கேட்டு மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். ரகசிய எண் கேட்டு ஒரே தொலைபேசி எண்ணில் இருந்து மிரட்டல் வருகிறது.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக 9073779030 என்ற எண்ணில் இருந்து பலருக்கு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் நபர் தான் வங்கி மேலாளர் முத்துக்குமார் என்றும் தங்களது ஏ.டி.எம். ரகசிய எண்ணை தெரிவிக்கும்படி கூறுகிறார்.

  இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே எண்ணுக்கு அழைத்தால் இணைப்பு கிடைப்பதில்லை. மீண்டும் பல பேரிடம் ஒரே எண்ணில் இது போன்ற மிரட்டல் வருவதாக பல வங்கிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.

  வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மர்ம செல்போன் எண் யாருடையது என விசாரித்து வருகின்றனர். மேலும் வங்கி நிர்வாகம் சார்பில் வாடிக்கையாளர்கள் யாரும் ஏ.டி.எம். ரகசிய எண்ணை யாரிடமும் தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Next Story
  ×