என் மலர்

  செய்திகள்

  மோட்டார் சைக்கிள் மோதி தனியார் கல்லூரி பேராசிரியர் பலி
  X

  மோட்டார் சைக்கிள் மோதி தனியார் கல்லூரி பேராசிரியர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்தி அருகே நடந்து சென்ற கல்லூரி பேராசிரியர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 37). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

  இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் பஸ்சில் இருந்து காரைக்கால் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென செல்வராஜ் மீது அதிவேகமாக மோதியது. இதில் அவர் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார்.

  உடனே அக்கம், பக்கத்தினர் செல்வராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் இன்று அதிகாலையில் செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  இந்த விபத்து சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×