என் மலர்
செய்திகள்

வில்லாபுரத்தில் பட்டதாரி இளம்பெண் மாயம்
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முருகவள்ளி. இவருடைய மகள் உமா மகேசுவரி (வயது 21), பி.காம் பட்டதாரி.
ரெடிமேட் கடையில் வேலை பார்த்து வந்த உமா மகேசுவரி, சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.
அதன் பிறகு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி மீண்டும் வேலைக்குச் செல்வதாக உமா மகேசுவரி வீட்டில் கூறினார். தான் முன்பு வேலை பார்த்த கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினார்.
அதன் பிறகு மாலையில் உமா மகேசுவரி வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றி தகவல் கிடைக்கவில்லை. மகள் மாயமானது குறித்து அவனியாபுரம் போலீசில் முருகவள்ளி புகார் செய்தார்.
அதில் வலையங்குளத்தைச் சேர்ந்த வாலிபருடன், உமா மகேசுவரிக்கு பழக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த வாலிபர் உமா மகேசுவரியை கடத்திச் சென்றிருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.