என் மலர்

  செய்திகள்

  வம்பாகீரப்பாளையத்தில் பட்டதாரி இளம்பெண் மாயம்
  X

  வம்பாகீரப்பாளையத்தில் பட்டதாரி இளம்பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வம்பாகீரப்பாளையத்தில் பட்டதாரி இளம் பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதுச்சேரி:

  புதுவை வம்பாகீரப் பாளையம் முத்துமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன்.

  இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரிதா (வயது 22). இவர் பி.எஸ்.சி. படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரிதா திடீரென மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சரிதா இல்லை.

  இதையடுத்து கன்னி யப்பன் தனது மகள் மாய மானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரிதாவை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது காதல் வலையில் சிக்கி காதலனுடன் சென்றாரா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×