என் மலர்

  செய்திகள்

  டிரைவிங் லைசென்ஸ், புதுப்பித்தல், விலாச மாற்றத்துக்கு இனி ஒரே படிவம்
  X

  டிரைவிங் லைசென்ஸ், புதுப்பித்தல், விலாச மாற்றத்துக்கு இனி ஒரே படிவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போக்குவரத்து துறையில் டிரைவிங் லைசென்ஸ், லைசென்ஸ் புதுப்பித்தல், விலாச மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே படிவத்தில் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  சென்னை:

  தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  மத்திய மோட்டார் வாகன விதி 1989 ல் பின்வரும் விதித்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திருத்தத்தில் முகவரி மற்றும் வயதிற்கு சான்றாக ஆதார் அட்டை சமார்ப்பிக்க திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

  மேலும் பழகுனர் உரிமம், புதிய ஓட்டுநர் உரிமம், உரிமத்தில் விலாச மாற்றம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு வெவ்வேறு படிவங்கள் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது.

  தற்போது மேற்கண்ட அனைத்து பணிகளையும் படிவம் 2-லேயே பூர்த்தி செய்ய திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் மேற்கண்ட தேவைகளை ஒரே படிவத்தில் பூர்த்தி செய்து 01.04.2018 முதல் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  இவ்வாறு போக்குவரத்து ஆணையர்  கூறியுள்ளார். #tamilnews
  Next Story
  ×