என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கழுகுன்றம் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை
    X

    திருக்கழுகுன்றம் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை

    திருக்கழுகுன்றம் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த கருமாரப்பாக்கத்தை சேர்ந்தவர் திருலோகம். இவர் நிலத்தை விற்ற ரூ.4 லட்சத்தை தனது மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துக்கொண்டு திருக்கழுகுன்றத்தில் உள்ள வங்கியில் செலுத்த வந்தார்.

    அவர் மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு நின்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×