என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மாபேட்டை அருகே கணவருடன் தகராறு- தீக்குளித்து மனைவி பலி
    X

    அம்மாபேட்டை அருகே கணவருடன் தகராறு- தீக்குளித்து மனைவி பலி

    அம்மாபேட்டை அருகே கணவருடன் தகராறில் தீக்குளித்து மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையம் பகுதியை சேர்ந்தவர குப்புசாமி. இவரது மனைவி மேகலா (வயது24).

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த மேகலா வீட்டில் இருந்த டீசலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதனால் அவர் அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பிறகு 108 ஆம்புலன்சு மூலம் பவானி அரசு அஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மேகலா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×