என் மலர்

  செய்திகள்

  கோட்டக்குப்பத்தில் மாடியில் நடைபயிற்சி சென்ற என்ஜினீயர் தவறி விழுந்து பலி
  X

  கோட்டக்குப்பத்தில் மாடியில் நடைபயிற்சி சென்ற என்ஜினீயர் தவறி விழுந்து பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோட்டக்குப்பத்தில் மாடியில் நடைபயிற்சி சென்ற என்ஜினீயர் தவறி விழுந்து இறந்து போனார்.

  சேதராப்பட்டு:

  புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வின் சென்ட் (வயது 74). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் வழக்கமாக தினமும் மாலை வீட்டின் மாடியில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.

  சம்பவத்தன்று அது போல் வீட்டின் மாடியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார்.

  இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வின்சென்டை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று பலனின்றி வின்சென்ட் பரிதாபமாக இறந்து போனார்.

  இதுகுறித்து அவரது மகன் எட்வர்டு கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×