என் மலர்

  செய்திகள்

  மரக்காணம் அருகே கார் மோதி கிறிஸ்தவ பாதிரியார் பலி
  X

  மரக்காணம் அருகே கார் மோதி கிறிஸ்தவ பாதிரியார் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார் மோதி கிறிஸ்தவ பாதிரியார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மரக்காணம்:

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார்(வயா25) கிறிஸ்தவ பாதிரியார். இவரது நண்பர் சந்தோஷ்.

  இவர்கள் இருவரும் ஒருமோட்டார் சைக்கிளில் மரக்காணம் அருகே நடுகுப்பத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றனர்.

  அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மாலையில் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் புறப்பட்டனர். மரக்காணத்தை அடுத்த ஆலத்தூர் கூட்ரோடு சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது முன்னால் லாரி ஒன்று சென்றது. அதனை முந்திச்செல்ல மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினர். அப்போது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் ரவிக்குமார், சந்தோஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

  பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் ரவிக்குமார் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தோசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  இந்த சம்பவம் குறித்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

  Next Story
  ×