என் மலர்

  செய்திகள்

  மனைவி கோபித்து சென்றதால் நகை செய்யும் தொழிலாளி தற்கொலை
  X

  மனைவி கோபித்து சென்றதால் நகை செய்யும் தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிள்ளை தோட்டத்தில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் நகை செய்யும் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  புதுச்சேரி:

  புதுவை பிள்ளை தோட்டம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). நகை செய்யும் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

  குடிப்பழக்கம் உள்ள முருகன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி செல்விக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மது குடிப்பதை செல்வி கண்டித்தும் அதனை காதில் போட்டு கொள்ளாமல் முருகன் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

  சம்பவத்தன்று இது போல் முருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த போது, செல்வி கண்டித்தார். இதில், கணவன்- மனைவிக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதனால் கணவனுடன் கோபித்து கொண்டு செல்வி தனது குழந்தையுடன் மதுராந்தகத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து முருகனின் உறவினர் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் நியூட்டன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நமச்சி வாயம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

  Next Story
  ×