என் மலர்
செய்திகள்

தேவிபட்டினத்தில் குழந்தை திருமணம் நிறுத்தம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த 9-வது படித்து முடித்த 17 வயது சிறுமிக்கும், ராமேசுவரம் முனியசாமி மகன் ஜெகதீஸ் (வயது28) என்பவருக்கும் இன்று காலை தேவிபட்டினத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.
இது குறித்த தகவல் ராமநாதபுரம் சைல்டுலைன் அமைப்பினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தேவிபட்டினம் எஸ்.ஐ. நாகராஜபிரபு, மாவட்ட சமூக நல உதவி அலுவலர் பால்ச்சாமி சைல்டு லைன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், விரிவாக்க அலுவலர் ரத்தினக்குமார், நாகநாதன் மற்றும் போலீசார், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திருமணம் நடைபெறவிருந்த பெண் 9-வது வகுப்பு படித்தவர் எனவும், வயது 17 எனவும் தெரியவந்தது. இந்த குழந்தைக்கு திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதையடுத்து திருமணத்தை நிறுத்திக் கொள்வதாக இருதரப்பினரும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.