என் மலர்
செய்திகள்

நத்தம் அருகே மாட்டு வியாபாரி அடித்து கொலை
குள்ளனம்பட்டி:
நத்தம் அருகே வி.எஸ்.கோட்டை- காம்பார்பட்டி சாலையில் வாகைக்குளம் உள்ளது. இந்த குளம் தற்போது வறண்டு இதன் அருகேயே காட்டு பகுதி உள்ளது. இங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி கோபால் தலைமையில் நத்தம் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன், சாணார்பட்டி சப்-இன்ஸ் பெக்டர் அபுதல்கா மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாணையில் அந்த நபர் மார்க்கம்பட்டியை சேர்ந்த அமுல்ராஜ் என தெரியவந்தது.
மாட்டு வியாபாரியான இவர் மீது சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. மாடு வாங்க சென்று வருவதாக அமுல்ராஜ் பணத்துடன் வீட்டில் கூறி சென்றுள்ளார்.
ஆனால் குளத்துமேட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் பையில் இருந்த பணம் அப்படியே உள்ளது. அவரது தலை மற்றும் முகத்தில் வெட்டு காயம் உள்ளது. கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதால் எதிரிகள் யாரும் இவரை வெட்டி கொன்றனரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வியாபாரி ஒருவரை அடித்து கொலை செய்து வீசி சென்றனர். தற்போது சாணார்பட்டி பகுதியில் நடந்துள்ள இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews