என் மலர்
செய்திகள்

அனுமதியின்றி செயல்பட்ட பாரா மெடிக்கல் கல்வி நிறுவனத்துக்கு சீல் வைப்பு
வேதாரண்யத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் பாரா மெடிக்கல் கல்வி நிறுவனத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தனியார் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று கடந்த 2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. வேதாரண்யத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இக்கல்வி நிறுவனத்தில் ஆய்வு செய்து, பல்வேறு ஆவணங்களை கொண்டு சென்றனர். அப்போது இக்கல்வி நிறுவனம் 2010-ம் ஆண்டுக்கு பிறகு உரிய அனுமதி பெறாமலேயே செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்நிறுவனத்தை மூடி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். தற்போது இக்கல்வி நிறுவனத்தில் 33 மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து கலெக்டர் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதனடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். போலீசார் மூலம் கல்வி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்னர்.

Next Story