என் மலர்

    செய்திகள்

    ரூ.50 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. சஸ்பெண்டு
    X

    ரூ.50 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. சஸ்பெண்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேவதானப்பட்டி அருகே ரூ.50 லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    தேவதானப்பட்டி:

    திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலையில் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. சம்பவத்தன்று சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜன் பணியில் இருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டார்.

    அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி ரூ.50 லஞ்சமாக கேட்டுள்ளார். பணத்தை கொடுத்த அந்த கார் டிரைவர், சிறப்பு எஸ்.ஐ. வரதராஜன் பணம் வாங்கியதை வீடியோவாக அவருக்கு தெரியாமல் தனது சட்டைப்பையில் இருந்த செல்போன் மூலம் பதிவு செய்தார்.

    இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கும், புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.50 லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ. வரதராஜன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும் அந்த சம்பவத்தின் போது சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் அய்யப்பன், முகமது இஸ்மாயில் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

    Next Story
    ×