என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிராமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    கதிராமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    சீர்காழி அடுத்த கதிராமங்கலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கதிராமங்கலம் ஊராட்சி கொண்டத்தூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் தேக்கதொட்டியில் உள்ள மின்மோட்டார் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பழுது ஏற்பட்டு சீரமைக்கப்படாததால் அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவியது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×