என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 133-வது ஆண்டு தொடக்க விழா
    X

    ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 133-வது ஆண்டு தொடக்க விழா

    காங்கிரஸ் கட்சியின் 133-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் மாவட்டத் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரசின் கட்சியின் 133-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் மாவட்டத் தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் கமலக்கண்ணன் மணிரத்தினம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றினர். 

    அதனை தொடர்ந்து காந்தி பூங்காவிலிருந்து தொடங்கி 4 ரோடு,  கடைவீதி, அண்ணா சிலை வழியாக ஊர்வலமாக சென்று ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட பொது செயலாளர்கள் சசிக்குமார், தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க துணைத் தலைவர் பாக்கியராஜ், விக்னேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வினோத் நன்றி கூறினார். 

    இதேபோன்று ஆண்டி மடத்தில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 133-வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடினர். இவ்விழாவிற்கு வட்டார தலைவர் குடியரசு தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவர் ராஜதுரை, துனை தலைவர் செல்வராசு, செயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆண்டிமடம் கடை வீதியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை கிருஷ்னமூர்த்தி ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரான்ஸிஸ், ரவி, வட்டார செயலாளர் ராஜகோபால், கண்ணபிரான், பரமானந்தம், மார்க்சாமி, சாமிக்கன்னு, அன்பழகன், கலியன் மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவர் (மேற்கு) மாசிலாமணி நன்றி கூறினார்.  
    Next Story
    ×