என் மலர்
செய்திகள்

சோழவந்தானில் காளியம்மன் கோவிலில் நகை கொள்ளை
சோழவந்தான் கோவிலில் 6 பவுன் நகை, வெள்ளி ஆபரணங்களை கொள்ளை அடித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள கீழநாச்சிகுளத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இதில் ரவி, அழகர் ஆகிய இருவரும் பூசாரிகளாக உள்ளனர்.
பூசாரி ரவி சம்பவத்தன்று கோவிலின் வெளிக்கதவை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக கோவில் டிரஸ்ட் செயலாளர் ரத்தினசாமி சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story