என் மலர்
செய்திகள்

தென்காசியில் திடீர் நில அதிர்வு: அச்சத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்
தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.
தென்காசி:

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலைப்பகுதியில் உள்ள தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு சுமார் 9:00 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதனால் அச்சன்புதூர், வடகரை, பண்பொழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
கேரளா மாநிலத்தின் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் வரை இந்த நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story