என் மலர்

  செய்திகள்

  ராமநாதபுரம் அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
  X

  ராமநாதபுரம் அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் அருகே கிணறு தோண்டியபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் அருகே உள்ள புதுமடம் மேற்கு அருளொளி நகரைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 60). கிணறு தோண்டும் தொழிலாளி.

  சம்பவத்தன்று மகன் பிரபுவுடன் வலங்காபுரியில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார்.

  கிணற்றுக்குள் உறையை பொருத்திக் கொண்டிருந்த போது திடீரென மண் சரிந்தது. இதில் உள்ளே இருந்த பாலுச்சாமி காயம் அடைந்தார். மேலும் அவரது வயிற்றுப்பகுதியில் கடப்பாரை குத்தியது.

  படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாலுச் சாமி பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×