என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூரில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
    X

    திருவெண்ணைநல்லூரில் மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது

    திருவெண்ணைநல்லூரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் திருவெண்ணைநல்லூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மேல்தணியாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி (வயது 39), சேமங்கலம் நடராஜன் (83) டி.குமாரமங்கலம் கோவிந்தன் (65), ஏனாதிமங்கலம் கோவிந்தன் (59) ஆகிய 4 பேரும் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    இதையொட்டி குப்புசாமி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×